preloader

MIJTR Overview

 

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ்

எங்களைப் பற்றி..

2500 ஆண்டுகளுக்கு முன்பு நாகரீக வளர்ச்சியின் முன்னோடியாக இருந்த தமிழ் மக்கள் வாழ்ந்த தமிழ் நாட்டில் இருந்து வெளிவரும் மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் உலக மக்கள் அனைவரையும் அன்புடன் வணங்கி வரவேற்கிறது.

பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி, தற்போது வழக்கில் இருக்கும் ஒரு சில செம்மொழிகளில் ஒன்றாகும். தமிழ் சொல் வளம் நிறைந்த மொழி. அத்தகைய தமிழ் சார்ந்த ஆராய்ச்சியின் பரந்த பகுதிகளை ஆய்வதற்கும் அதை விரிவுபடுத்துவதற்கும்  இந்த “மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ்” உருவாக்கப்பட்டுள்ளது. மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் தமிழ் மொழி, இலக்கியம், கலை, கலாச்சாரம், தொல்லியல் மற்றும் அதன் தொடர்புடைய துறைகளில் முன்னேற்றம் தொடர்பான அறிவைப் பரப்புவதற்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது.

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் என்பது தமிழ் மற்றும் தொடர்புடைய துறைகளான கலை, இலக்கியம், சமயம், இலக்கணம், தத்துவம், வரலாறு, தமிழர் பண்பாடு, வாழ்வியல், அரசியல்,கலாச்சாரம், மொழியியல், நாட்டுப்புறவியல், தொல்லியல், மதம், அறிவியல் மற்றும் கணினித் தமிழ் தொடர்பான ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பு, முன்னேற்றம் மற்றும் பரப்புதலை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த ஆய்விதழ் ஆகும்.

 

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் என்பது உலகளாவிய சமூகத்திற்கு தமிழ் துறைகளில் சமீபத்திய ஆராய்ச்சி மற்றும் முன்னேற்றங்களுக்கான தளத்தை வழங்குவதாகும். இவை தமிழ் துறைகளின் அசல் ஆராய்ச்சியின் வெளியீடுகளைக் கொண்டுள்ளது.

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் அனைத்து ஆராய்ச்சியாளர்களும் புதிய ஆராய்ச்சியாளர்களிடையே தங்கள் ஆராய்ச்சியைப் பகிர்ந்து கொள்ளக்கூடிய சூழலை உருவாக்கியுள்ளது மற்றும் சமூகத்தில் வாழ்க்கையின் முன்னேற்றத்திற்கு உதவுகிறது.

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் என்பது ஒரு கல்வி ஊடகம். தமிழ் துறைகளில் உயர் மட்ட கற்றல், கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சி ஆகியவற்றை ஆதரிக்கும் ஒரு ஊடகம். தமிழ் ஆராய்ச்சி முடிவுகளின் முன்னேற்றம் மற்றும் பரப்புதலுக்கான முக்கியமான குறிப்பை வழங்குவதாகும்.

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் என்பது தமிழ் மற்றும் தொடர்புடைய துறைகளில் அடிப்படை மற்றும் இடைக்கால அறிவின் கண்டுபிடிப்பு, முன்னேற்றம் மற்றும் பரப்புதலை ஊக்குவிக்கும் ஒரு ஆய்விதழ். உலகமெங்கிலும் உள்ள ஆராய்ச்சி நிறுவனங்களிலும், பல்கலைக்கழகங்களிலும் பலதரப்பட்ட தமிழ் மொழி, இலக்கியம், கலை, கலாச்சாரம், தொல்லியல் மற்றும் அந்த துறை சம்பந்தமான ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. பல நாடுகளிலும், நகரங்களிலும் நம் தமிழ் மக்கள் அல்லாது மற்ற மக்களும் நம் தமிழ் மொழியை பேசி வருகின்றனர். அவையே நம் தமிழ் மொழியின் சிறப்பு.

21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற ஒரு வெளியீட்டு தளத்தை ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆய்வாளர்களுக்கும் வழங்குவதோடு, ஒட்டுமொத்த வெளியீட்டு அனுபவத்தை மேம்படுத்துவதோடு, வெளியீட்டு செலவுகளை குறைப்பதே எங்கள் நோக்கம்.

2021 ஆம் ஆண்டு முதல் வெளிவரும் இவ்விதழில் தமிழ்த்துறை பேராசிரியர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள் மற்றும் தமிழ் துறை அல்லாத தமிழ் ஆர்வலர்கள் போன்றோர் பலரும் தங்கள் ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டு தமிழின் வளர்ச்சிக்கும் இதழின் வளர்ச்சிக்கும் சேவை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.
மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ்,  மூன்று மாதங்களுக்கு ஒருமுறை காலாண்டிதழாக மார்ச், ஜூன்,செப்டம்பர், டிசம்பர் ஆகிய திங்களில் தொடர்ந்து பிரசுரமாகும்.
இந்த ஆய்விதழில் வெளியிடப்படுவதற்குத் தரமான ஆய்வுக் கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

CONFERENCE SPECIAL ISSUE / கருத்தரங்க சிறப்பிதழ்

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தேசிய கருத்தரங்கு மற்றும் சர்வதேச கருத்தரங்கு, கல்லூரிகளால் நடத்தப்பட்ட கருத்தரங்கு போன்றவற்றிலிருந்து சிறப்பிதழ்களுக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

மின்னஞ்சல்
conferenceissue@mijtr.com

எங்களுடன் இணையுங்கள்...

எங்கள் இதழின் ஆசிரியர் குழு உறுப்பினர் (Editorial Board Member) அல்லது மதிப்பாய்வாளர் (Reviewer) ஆக வேண்டுமா?

Want to become an Editorial Board Member or Reviewer of our journal?