preloader

Authors Guidelines

Author's Guidelines

ஆசிரியரின் வழிகாட்டுதல்கள்

தமிழ்ப் பேராசிரியர்கள், அறிஞர்கள், ஆய்வாளர்கள், முனைவர் பட்ட ஆய்வு மாணாக்கர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் யாவரும் கட்டுரைகள் அனுப்பலாம்.

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழுக்கு கட்டுரை அனுப்பும் ஆய்வாளர்கள் கீழ்க்காணும் வழிமுறைகளையும் விதிமுறைகளையும் அவசியம் பின்பற்ற வேண்டும். அவ்வாறு இல்லாத கட்டுரைகள் பரிசீலனைக்கு எடுத்து கொள்ளப்படமாட்டாது.

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் என்பது தமிழ் மற்றும் தொடர்புடைய துறைகளில் கலை, இலக்கியம், சமயம், இலக்கணம், தத்துவம், வரலாறு, தமிழர் பண்பாடு, வாழ்வியல், அரசியல், கலாச்சாரம், மொழியியல், நாட்டுப்புறவியல், தொல்லியல், மதம், அறிவியல் மற்றும் கணினித் தமிழ் தொடர்பான ஆராய்ச்சிகளின் கண்டுபிடிப்பு, முன்னேற்றம் மற்றும் பரப்புதலை ஊக்குவிக்கும் ஒரு சிறந்த ஆய்விதழ் ஆகும்.

 
 

கையெழுத்துப் பிரதி (Manuscript)

  • ஆய்வுக்கட்டுரையானது தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இருக்கலாம்.
  • ஆய்வுக்கட்டுரைகள் அதிகபட்சம் 5-12 பக்கங்களுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • ஆய்வுச்சுருக்கம் 150 வார்த்தைகளுக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.
  • ஆய்வுக்கட்டுரை யுனிகோடு அல்லது  லதா (தமிழ்) மற்றும் டைம்ஸ் நியூரோமன் (ஆங்கிலம்) எழுத்துருவில் கணினி வழி தட்டச்சு செய்து இருக்க வேண்டும்.
  • A4 தாள் அளவில், கட்டுரையின் வரிகளுக்கிடையில் 1.15 இடைவெளியிடப்பட்டு, எழுத்துரு 10 அளவில் இருத்தல் அவசியம். (MS Office, A4 Size, 1.15 Line Spacing).
  • அடிக்குறிப்புகளுக்கு எண்களின் வரிசை கொடுத்து கட்டுரையின் முடிவில் பட்டியலிடப்பட வேண்டும்.
  • மேற்கோள்களுக்கான துணைநூற்பட்டியல் பொருத்தமானதாக இருத்தல் வேண்டும்.
  • கட்டுரைகள் தட்டச்சுப் பிழை, இலக்கணப் பிழை இன்றி அமைதல் வேண்டும்.
  • மேற்கோள்கள், இலக்கியத்திற்கு ஆராய்ச்சி நெறிமுறைகள் மற்றும் MLA எட்டாம் பதிப்பு முறையிலும், அறிவியல் சார்புடையதற்கு APA முறையிலும் மற்றும் வரலாறு சார்புடையதற்கு Chicago முறையிலும் அமைய வேண்டும்.

அதன் மாதிரியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். கிளிக் செய்யவும்.

Article Fullnote

கட்டுரை முழுக்குறிப்பு
  • ஆய்வுச்சுருக்கம், ஆறு முதன்மைச் சொற்கள், முடிவுரை, மேற்கோள்களுக்கான துணைநூற்பட்டியல் இருத்தல் அவசியம்.
  • முழுகுறிப்புப் பட்டியல் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் அமைய வேண்டும்.

அதன் மாதிரியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். கிளிக் செய்யவும்.

Photos

படங்கள்
  • கட்டுரைக்குப் பொருத்தமானதும், வலு சேர்க்கக்கூடியதுமான படங்களையும், வரை படங்களையும் சேர்த்து அனுப்பினால், ஏற்புடையவற்றைப் பிரசுரிக்க முடியும். அவை வாசிப்பாளர்களுக்குப் பயனுள்ளதாக அமையும்.

Fund Contribution & Acknowledgement

நிதி பங்களிப்பு மற்றும் நன்றியுரை
  • ஒப்புதல் சார்ந்த தகவல்கள், நன்றியுரை மற்றும் நிதிஉதவி சார்ந்த தகவல்கள் மற்றும் இதர தகவல்கள் இடம்பெற வேண்டும்.

அதன் மாதிரியை பதிவிறக்கம் செய்து கொள்ளவும். கிளிக் செய்யவும்.

  • கட்டுரைகள் வேறு எந்த ஒரு ஆய்விதழிலோ பத்திரிகையிலோ ஏற்கனவே பதிப்பிக்கப்பட்டதாக இருத்தல் கூடாது.
  • பதிப்பிக்கப்படாத ஆய்வுக்கட்டுரையாயினும் வேறு இதழ்களுக்கு ஏற்கனவே அனுப்பி வைக்கப்பட்டவற்றை அனுப்ப வேண்டாம். அவ்வாறே, இவ்விதழுக்கு அனுப்பிய கட்டுரையை எங்களது ஆசிரியர் குழு முடிவு தெரிவிக்கும் வரை வேறு இதழ்களுக்கும் அனுப்ப வேண்டாம்.
  • கட்டுரைகள் அசல் தன்மையுடனும் (Originality), வேறு ஆய்வுக்கட்டுரைகளைத் தழுவாமலும், கருத்துக் களவு (Plagiarism) 15 விழுக்காட்டிற்கு மிகாமலும் இருத்தல் வேண்டும்.
  • முனைவர் பட்ட ஆய்வாளர்கள், கட்டுரையை அனுப்புவதற்கு முன்பாகத் தங்கள் நெறியாளரிடம் காட்டி ஒப்புதல்பெற்று அனுப்பிட வேண்டுகிறோம்.
  • கட்டுரைகள் வெளியிடும் முன்பு பதிப்புரிமை உறுதிமொழிப் படிவத்தில் கையொப்பம் பெறப்படும்.
  • ஆய்வுக்கட்டுரைகளைச் மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் பிரசுரிக்க வெளியீட்டுக் கட்டணம், செயலாக்கக் கட்டணம் போன்றவை கிடையாது.
  • மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் இணையதளத்தில் உங்கள் கட்டுரைகளை இலவசமாகத் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ் கட்டுரை வெளியீட்டுச் சான்றிதழ் வேண்டுவோர் உரிய கட்டணத்தைச் செலுத்திப் பெற்றுக்கொள்ளலாம்.

21 ஆம் நூற்றாண்டுக்கு ஏற்ற ஒரு வெளியீட்டு தளத்தை ஆசிரியர்களுக்கும் மற்றும் ஆய்வாளர்களுக்கும் வழங்குவதோடு, ஒட்டுமொத்த வெளியீட்டு அனுபவத்தை மேம்படுத்துவதோடு, வெளியீட்டு செலவுகளை குறைப்பதே எங்கள் நோக்கம்.

 
 

ஒப்படைப்பு முறை (Submission Method)

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழானது ஆசிரியர்களிடம் இருந்து கட்டுரைகளைப் பெறுவதற்கும் (Submission), அவற்றை சகமதிப்பாய்வு (Peer-reviewed) செய்வதற்கும், பதிப்புரிமை அனுமதி பெறுவதற்கும் (Copyrights), மற்றும் அனைத்து செயல்பாடுகளும் முடிந்த பின்பு கட்டுரையை மின்னணு வடிவில் பிரசுரிக்கவும் (Publish), பார்வையாளர் பகுப்பாய்வு (Viewer & Subscriber Analytics) செய்யவும் நாங்கள் மாயன் இதழ் செயல்பாட்டு தானியங்கி அமைப்பு (Maayan Journal Workflow Automation System) என்னும் மென்பொருளை உருவாக்கியுள்ளோம்.

ஆசிரியர்கள் அனைவரையும் அந்த மென்பொருளின் வழியே தங்களின் கட்டுரைகளையும், இதர ஆவணங்களையும் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

அந்த மென்பொருளை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை சொடுக்கவும்.

How to use Automation Software?

CONFERENCE SPECIAL ISSUE / கருத்தரங்க சிறப்பிதழ்

மாயன் பன்னாட்டுத் தமிழாய்விதழ், பல்கலைக்கழகங்களால் நடத்தப்படும் தேசிய கருத்தரங்கு மற்றும் சர்வதேச கருத்தரங்கு, கல்லூரிகளால் நடத்தப்பட்ட கருத்தரங்கு போன்றவற்றிலிருந்து சிறப்பிதழ்களுக்கு கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

மின்னஞ்சல்
conferenceissue@mijtr.com

எங்களுடன் இணையுங்கள்...

எங்கள் ஆசிரியர் குழுவில் உறுப்பினர் (Editorial Board Member) அல்லது மதிப்பாய்வாளர் (Reviewer) ஆக வேண்டுமா?

Want to become an Editorial Board Member or Reviewer of our journal?